ராணிப்பேட்டை அருகே, தாழ்வான மின்கம்பி மீது பேருந்து உரசியதில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் டீ அருந்துவதற்காக பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது.
அப்போது, மின் கம்பி பேருந்தின் மேல் கூரை மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில், பேருந்தில் இருந்த அகல்யா என்ற இளம் பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.