தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்போவதாக அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதால் வாக்குச்சீட்டில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.