நீண்ட நேரமாக விமான நிலையத்தில் தவித்த ஏக்நாத் ஷிண்டே.., என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கானில் இருந்து மும்பைக்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது விமானி விமானத்தை இயக்க மறுத்துவிட்டார். தன்னுடைய பணி நேரம் முடிவடைந்து விட்டது. விமானத்தை இயக்க புதிய அனுமதி பெற வேண்டும். அதற்கு சில மணி நேரம் ஆகும் என தெரிவித்தார்.

இதனால் ஏக்நாத் ஷிண்டே விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ஏக்நாத் ஷிண்டே உடன் வந்தவர்கள் அதிகாரிகளுடன் பேசி, அனுமதி பெற்றபின் விமானம் இயக்கப்பட்டது.

இதற்கிடையே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால்தான் விமானி, விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related News

Latest News