Sunday, April 20, 2025

‘ஈ சாலா கப் நமதே’ கஜினி முஹம்மது ‘RCB’யின் பிளேயிங் XI இதுதானாம்!

IPL தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டில் இருந்து, தங்களின் முதல் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கஜினி முஹம்மது போல படையெடுத்து வருகிறது. அவெஞ்சர்ஸ் கூட இந்த உலகத்தைக் காப்பாற்ற இவ்வளவு போராடி இருக்க மாட்டார்கள். ஆனால் RCB ஒவ்வொரு IPL தொடரையும் வாழ்வா? சாவா? மோடில் தான் விளையாடுகிறது.

அந்த அணிக்காக கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல் என, உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் அத்தனை பேருமே களமிறங்கி பார்த்து விட்டனர். ஆனாலும் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

‘கிரிக்கெட் உலகின் ராஜா’ என ரசிகர்களால் புகழப்படும் விராட் கோலி, தனிப்பட்ட முறையில் எத்தனையோ உலக சாதனைகளை முறியடித்து விட்டார். புதுப்புது சாதனைகளிலும் தன்னுடைய பெயரை பொறித்து வருகிறார். இந்த IPL கோப்பை மட்டும், ஒரு மோசமான nightmare ஆகவே அவருக்கு உள்ளது.

என்றாலும் இந்த முறை பில் சால்ட் தொடங்கி புவனேஷ்வர் குமார் வரை, தரமான வீரர்களை RCB ஏலத்தில் எடுத்துள்ளது. அதோடு புதிய கேப்டனாக இளம்வீரர் ரஜத் படிதார் அணியை வழிநடத்த இருக்கிறார். ஆகவே இந்த 18வது ஆண்டில் பெங்களூரு நிச்சயம், ‘ஈ சாலா கப் நமதே’ என்ற கனவினை நனவாக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

அதோடு விராட்டின் ஜெர்சி நம்பர் 18 என்பதும் இந்த நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. சொல்லப்போனால் RCB IPL கோப்பையை ஏந்தும் அந்த நாள், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே கொண்டாடும் திருநாளாக நிச்சயம்  இருக்கும்.

அந்தவகையில் நடப்பு IPL தொடரில் பெங்களூரு அணியின், பிளேயிங் லெவன் குறித்து இங்கே பார்க்கலாம். ஓபனர்களாக விராட் கோலி, பில் சால்ட் இருவரும் களம் காணுகின்றனர். ஒன் டவுனில் கேப்டன் ரஜத் இறங்குகிறார். 4வது, 5வது இடங்களை வெளிநாட்டு வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

6வது இடத்தில் ஜிதேஷ் சர்மாவும், 7வது இடத்தில் ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியாவும் விளையாட உள்ளனர். 8வது இடம் சுழற்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு. 9வது இடத்தில் அபாயகரமான பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டும், 10வது இடத்தில் ரசிக் சலாமும் ஆடவிருக்கின்றனர்.

Last but not least என்பது போல கடைசி இடம் பந்துவீச்சாளர் யஷ் தயாளுக்கு. Impact வீரர்களாக ஸ்வப்னில் சிங், சுயாஷ் சர்மா விளையாடுவார்கள் என கூறப்படுகிறது. மேற்கண்ட இந்த 13 பேரும் குழுவாக இணைந்து ஆடினால் இவர்களை எதிர்க்க, எதிரணியில் எந்த கொம்பனும் இல்லை.

ஆனால் தோப்பில் இருந்தாலும் ஒவ்வொரு மரமும், தனித்தனி தான் என்பது போல தான் RCB அணி ஒவ்வொரு சீசனிலும் விளையாடி வருகிறது என்பதால், என்ன நடக்கிறது என்பதை நாம் வழக்கம்போல பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Latest news