Monday, December 8, 2025

‘இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர்’ : எடப்பாடி பழனிசாமி பதிவு

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும்,
சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News