அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இதனையடுத்து, செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.