ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினங்களில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 எனும் சூதாட்ட செயலிகள் வழியாக 3 கோடி ரூபாய் வரை பறிக்கப்பட்டதாக புகார் வந்தது.
விசாரணையில், இந்த செயலிகளுக்கு பிரபல திரைப்பட நடிகர்கள் விளம்பரமாக நடித்துள்ளனர் என தெரியவந்தது. இதனை ஊக்குவிப்பதற்காக, அந்த பிரபலங்கள் அதிகமான கமிஷனை பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் சூதாட்ட செயலிகள் விளம்பரம் செய்ய உதவியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில், ஜூலை 21 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியாக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.