இந்தியாவில் செயல்படும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் மிந்த்ராவும் ஒன்றாகும். இதன் மீது நேரடி அந்நிய முதலீட்டு (FDI) விதிகளை மீறி ரூ.1,654.35 கோடிக்கு மோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மிந்த்ராவும் அதன் தொடர்புடைய நிறுவனங்களும் பொருள்களை மொத்தமாக வாங்கி பணம் செலுத்தும் முறையில் வர்த்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மறைமுகமாக பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை தனியொரு நிறுவனத்தின் பெயரில் வணிகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளன. இது அந்நிய முதலீட்டு (FDI) விதிகளை மீறிய செயல் என்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.