வேலையில்லா  திண்டாட்டம் – பட்டதாரி பெண் தேநீர் விற்கும்  அவலம்

455
Advertisement

வேலை கிடைக்காததால் பொருளாதாரப் பட்டதாரி பெண்  ஒருவர் கல்லூரிக்கு வெளியே தேநீர் விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பீகாரின் பூர்னியா மாவட்டத்தை  சேர்ந்த 24 வயதான பிரியங்கா என்ற பெண் , வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தில் பட்டம் பெற்றவர்.அதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார், ஆனால் அவர் தேர்ச்சிபெறவில்லை.

மனம் வெறுத்து போன  பொருளாதார பட்டதாரியான பிரியங்கா , நல்ல வேலை கிடைக்காததால் டீக்கடை திறந்து தொழிலதிபராக மாற முடிவு செய்தார் .அதன்படி பாட்னா மகளிர் கல்லூரிக்கு வெளியே “சாய்வாலி” என்ற பெயரில் தேனீர் கடையை துடங்கியுள்ளார்.இவரின் நிலை தற்போது இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்து உள்ளது.

கடந்த ஏப்ரல் 11 முதல் பாட்னா மகளிர் கல்லூரிக்கு வெளியே தேநீர் விற்கத் தொடங்கினார். அவரது கடை “ சாய்வாலி “, பான் டீ மற்றும் சாக்லேட் டீ உட்பட 4 புதுமையான தேநீர் வகைகளை வழங்குகிறது. அவரது கடைக்கு வெளியே உள்ள பலகையில் , “ஆத்மநிர்பார் பாரதத்தை நோக்கிய முயற்சி. சோச் மாட், சாலு கர் தே பாஸ் [அதைப் பற்றி யோசிக்க வேண்டாம், தொடங்குங்கள்] என்ற வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில் , “கடந்த இரண்டு வருடங்களாக, வங்கிப் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன், ஆனால் வீண். எனவே, வீட்டிற்குத் திரும்புவதற்குப் பதிலாக, பாட்னாவில் ஒரு கை வண்டியில் எனது தேநீர் கடையை அமைக்க முடிவு செய்தேன். நகரத்தில் சொந்தமாக டீக்கடை அமைக்க நான் தயங்கவில்லை, மேலும் இந்த வணிகத்தை ஆட்டம்நிர்பார் பாரத் நோக்கிய ஒரு படியாகவே பார்க்கிறேன்,” என்கிறார் பிரியங்கா.

இவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரின் முயற்சியை பாராட்டும் நெட்டிசன்கள் ,அவ்வழியாக செல்வோர்கள் கண்டிப்பாக ப்ரியங்காவின் தேனீர் கடைக்கு சென்று தேனீர் பருக வேண்டும் என பதிவிடுவருகின்றனர்.மற்ற சில பேர் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள அவலநிலை குறித்தும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.