அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

64
earthquake
Advertisement

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பசார் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பசார் பகுதியிலிருந்து 92 கிமீ தொலைவில் 106 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இது அந்த மாவட்டத்தில் நிகழும் இரண்டாவது நிலநடுக்கம்.

Advertisement

முன்னதாக கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.