Wednesday, December 17, 2025

அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசம் மேற்கு கமெங் பகுதியில் இன்று காலை 5.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவானது.

இதனை தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்திலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7 அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ஒரே நாளில் மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News