‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து லவ் டுடே, ட்ராகன் என இரண்டு படங்களிலும் ஹீரோவாக களமிறங்கி ஹிட் கொடுத்தார். இதையடுத்து இவர் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் நேற்று வெளியானது.
இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதல் நாளிலேயே இப்படம் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது.
நேற்று பைசன், டீசல், டியூட் என 3 படங்கள் வெளியானது. நேற்று வெளியான படங்களிலேயே டியூட் படம் தான் அதிக வசூலை பெற்றுள்ளது.
