இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு இருப்பதால், இரு நாடுகளும் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்கிடையே இந்தியாவில் நடைபெற்று வந்த T20 கிரிக்கெட் தொடரான IPL, பாகிஸ்தானில் நடைபெற்ற PSL இரண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
IPL தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக BCCI அறிவித்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ நாங்கள் மிச்சமுள்ள போட்டிகளை துபாயில் நடத்திக் கொள்கிறோம் என, தெனாவெட்டாக அறிவித்தது. ஆனால் இதற்கு அந்நாடு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா காலத்தில் IPL தொடரை BCCI துபாய் ஆடுகளங்களில் தான் நடத்தியது. இதேபோல அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைக் கூட, இந்தியா அங்கு தான் விளையாடியது.
தற்போது பாகிஸ்தானுக்கு PSL தொடரினை நடத்த அனுமதி அளித்தால், இந்தியா உடனான நட்பு கெட்டுப்போகும் என்று துபாய் அஞ்சுகிறதாம். அதோடு போர் பதற்றம் இருப்பதால், இதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு, துபாய் ஆதரவு அளிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு விடும்.
இது தங்களது நாட்டுக்கு நல்லது கிடையாது. குறிப்பாக இந்தியாவின் நட்பினை இழந்து விடக்கூடாது என்று துபாய் கருதுகிறதாம். எனவே PSL தொடரினை இங்கு நீங்கள் நடத்த வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாம். இதனால் மீதமுள்ள போட்டிகளை எங்கு நடத்துவது? என்று தெரியாமல் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது.
அதேநேரம் மிச்சமுள்ள IPL போட்டிகளை இங்கு வந்து நடத்திக் கொள்ளுங்கள் என்று, BCCIக்கு துபாய் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறதாம். ஆனால் BCCIயோ போர் பதற்றம் முடிந்ததும், போட்டிகளை இந்தியாவிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.