போர்வையின் கீழ் ஒளிந்துகொண்ட குற்றவாளி-நாற்காலியுடன் தூக்கிச்சென்ற காவல்துறை

253
Advertisement

பல தருணங்களில், பல வேடிக்கையான நபர்களை நாம் பார்த்துருப்போம் ,குறிப்பாக மதுபோதையில் இருப்பவர்கள் சீரியசாக செய்யும் செயல்கள் செம காமெடி ஆகிவிடும்.இங்கு ஒருவர் நம் சிறு வயதில் ரசித்து பார்த்த “ஸ்கூபி-டூ” கார்ட்டூனை நினைவுபடுத்துவது போல காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் மேய்ன் என்ற பகுதியில் தான் இந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது, காவல்துறையின் தகவல்படி பெல்ஃபாஸ்ட் காவல் நிலையத்திற்கு,அட்மிரல் ஓஷன் இன் ஹோட்டலில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் , நபர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.புகாரையடுத்து ,காவல்துறையினர்  அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.காவல்துறை வருவதை அறிந்த ரகளையில் ஈடுபட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிக்கிக்க திட்டமிட்டுள்ளார்.

திட்டத்தின்படி அங்கிருந்து எங்கையோ சென்றுவிட்டார். காவல்துறையும் அங்கு சரியான நேரத்திற்கு வந்துவிட்டது.ஆனால் அந்த நபர் அங்கு இல்லை.ஹோட்டலில் உள்ள அனைத்து  மாடிகளிலும் பார்த்தபோது அங்கு அந்த நபர் இல்லை.

சில மணிநேரங்கள் கழித்து ,காவல்துறை புறப்பிட முடிவுசெய்து கார் பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளனர்.அங்கு ஒரு உருவம் வெள்ளை நிற போர்வை மூடியபடி  நாற்காலியில் உட்காந்து இருப்பது போல இருந்துள்ளது.பக்கத்துல போய் போர்வையை விளக்கி பார்த்தபோது  தான் தெரிந்தது காவல்துறை தேடிவந்த நபர் தான் ,அவர்களிடம் இருந்து தப்பிக்க இப்படி நாற்காலியில் ஒரு வெள்ளை நிற போர்வையால் மூடு உட்காந்து உள்ளார்.

பிலிப் டுலுட் என அடையாளம் காணப்பட்ட அந்த நபரை , குற்றவியல் அத்துமீறல் மற்றும் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஆம் ,அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் மீண்டும் போர்வையின் கீழ் ஒளிந்து மாட்டிகொண்டு raஉள்ளார்.இந்த தகவல் சமூக வலைதலையில் வைரல்கியது.நெட்டிசன்கள் வேடிக்கையாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.