Wednesday, December 24, 2025

குடிபோதையில் தாறுமாறாக லாரி ஓட்டிய நபர் கைது

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தவமணி. இவர் சேலம் உடையாபட்டி அருகே சரக்கு லாரியை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். லாரியை தாறுமாறாக ஓட்டியதுடன் சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணித்தவர்களை அச்சுறுத்து வகையில் லாரியை ஓட்டி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தையில் திட்டியதுடன் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய ரோந்து காவலருக்கு வாகன ஓட்டிகள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் தவமணி சிங்காரத்தை விசாரணை நடத்தினர். அப்பொழுது லாரி ஓட்டுநர் தவமணி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஓட்டுநர் தவமணி மது அருந்தியது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் லாரியையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

Related News

Latest News