குமரி மாவட்டம், கருங்கல் – திக்கணங்கோடு சாலை ஓரம், மத்திக்கோடு பகுதியில் மண்ணூர்குளம் உள்ளது. திக்கணங்கோட்டில் இருந்து கருங்கல் நோக்கி போதை நபர் ஒருவர் ஓட்டி வந்த ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மண்ணூர்குளத்தில் பாய்ந்தது. இதில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுமின்றி தப்பினார்.குளத்தில் கிடந்த ஆட்டோவை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.