Monday, July 28, 2025

“நீண்ட காலமாகவே திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது” – விஜய் ஆண்டனி பேட்டி

போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, மதுரையில் நடைபெற்ற ‘மார்கன்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட காலமாகவே உள்ளதாக திறந்த மனதுடன் பேசியுள்ளார்.

சிகரெட் பிடிப்பதும் போதை பழக்கத்தின் ஆரம்ப கட்டமாகும் என்றும், அதற்குப் பிறகு போதைப்பொருள் பழக்கம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News