Sunday, December 28, 2025

பெட்டி கடைகளில் சாக்லேட் வடிவத்தில் போதை மாத்திரைகள் : மாதர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

பெட்டி கடைகளில் சாக்லேட் வடிவத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கி சம்பளம் முழுமையாக வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், போதை கலாச்சாரம் என்பது பெட்டிக்கடை வரை வந்து விட்டதாகவும், சாக்லேட் வடிவத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினர்.

Related News

Latest News