பேருந்தின் ஸ்டெப்னி டயரில் பயணம் செய்த போதை ஆசாமி

ஆந்திராவில், மதுபோதையில் அரசு பேருந்திற்கு கீழ் உள்ள ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி, ஒருவர் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து இந்துப்பூருக்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தின் டயருக்கு பக்கத்தில் இருந்த ஸ்டெப்னி மீது, பயணி ஒருவர் மதுபோதையில் தொங்கியபடி பயணம் செய்திருக்கிறார். பின்னால் வந்த வாகன ஓட்டிகள், பேருந்தின் அடியில் ஒருவர் தொங்குவதை பார்த்து ஓட்டுநருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, அவரை மீட்டார். அவர் அதிக மதுபோதையால் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி, 15 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்தது விசாரணையில் தெரியவந்தது.

Related News

Latest News