கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர் சாலையில் செல்லும் மக்களிடையே தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மது போதையில் இருந்த ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது போலீசாரை போதை ஆசாமி ஒருமையில் பேசியது மட்டுமல்லால் உன்னால என்ன செய்ய முடியும், போடா வாடா என போலிசாரை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் போதை ஆசாமி முகத்தில் தண்ணியை ஊற்றி, லத்தியால் அடித்து துவைத்தார். பின்னர் போலீசார் வாகனத்தில் ஏற்றி வெரைட்டிஹால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
போதை ஆசாமி போலீசாருடன் தகராறு செய்யும் காட்சியும், அவரை அடித்து துவைக்கும் காட்சியும் வைரலாகி வருகிறது.