சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை கடத்திய போதை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட பேருந்து நீலாங்கரை அருகே லாரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து லாரி ஓட்டுநர் அளித்த புகாரின் பெயரில் பேருந்தை கடத்திய நபர் சில நிமிடங்களிலேயே கைது செய்யயப்பட்டார்.
பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பழிவாங்குவதற்காக பேருந்தை கடத்தியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.