அபுதாபியில் இருந்து சென்னை வந்த தனியார் விமான பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் கிடந்த பையை திறந்து பார்த்த போது, சாக்லேட், பிஸ்கட் பாக்கெட்களுக்கு நடுவில், மறைத்து வைத்து, நூதனமுறையில் ட்ரோன்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில், இது தீவிரவாதம் சம்பந்தப்பட்ட கடத்தலா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.