Friday, August 15, 2025
HTML tutorial

உணவு சாப்பிட்டுக்கொண்டே அலட்சியமாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட குமரன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்த இயக்கி சென்ற ஓட்டுனர் தங்கம் என்பவர் சாப்பாடு சாப்பிட்டபடி பேருந்தை இயக்குவது போன்ற வீடியோவை தனது instagram பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

இந்த வீடியோ தற்போது சமூக இளையதளங்களில் ட்ரெண்டாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள குமரன் ஆம்னி பேருந்து நிறுவனம் ஓட்டுநர் தங்கம் குமரன் டிராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே பணியில் இருந்து சென்று விட்டதாகவும் இந்த வீடியோ ஒரு மாதத்திற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் தங்கம் தொடர்ந்து வாகனம் ஓட்டும்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்ததன் காரணமாக ஏற்கனவே நிறுவனத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து வேலையில் இருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News