காபி குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. குறிப்பாக, காபி குடிப்பது ஆற்றலை அதிகரிக்கும், மனச்சோர்வைக் குறைக்கும். காபியில் அதிக அளவு காஃபின் உள்ளது. காஃபினை சிறிய அளவில் எடுத்துக் கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தசை நடுக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் வேகமான இதயத் துடிப்பை ஏற்படுத்தும்.
பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் காஃபின் உட்கொள்வது தூக்கத்தை பாதிக்கும். இது நம்மை சோர்வடையச் செய்யும் மெலடோனின்(melatonin) என்ற ஹார்மோனின்(hormone ) வெளியீட்டை 40 நிமிடங்கள் தாமதப்படுத்துகிறது.
ஒருவர் தினமும் 3 முதல் 5 கப் காபி வரை பருகலாம். அதற்கு மேல் பருகுவது நல்லதல்ல. ஏனெனில் ஒருவரின் உடலுக்கு தினமும் 400 மில்லி கிராம் காபின் போதுமானது.