பாகற்காய் கசப்பானது என்பதால் பலரும் இதை உணவில் சேர்ப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், இந்த கசப்புத்தன்மை தான் பாகற்காயை ஆரோக்கியமிக்க மற்றும் சக்திவாய்ந்த காயாக மாற்றுகிறது.
ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் பாகற்காய் ஜூஸ் பல காலமாக வாழ்க்கைமுறை நோய்கள், தோல் பிரச்சனைகள் மற்றும் செரிமான குறைபாடுகளுக்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தி வருகிறது. இது வெறும் பானம் அல்ல; உங்கள் உடலை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு சக்தி வாய்ந்த டானிக் ஆகும்.
Also Read : ஜூஸ் மட்டுமே உணவாக சாப்பிட்டால் என்ன ஆகும்?
இந்த பதிவில் தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன எனபதை இதில் பார்ப்போம்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பை கவலைப்படுவோருக்கு பாகற்காய் ஜூஸ் உதவியாக இருக்கும். ஏனென்றால் இது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். நீரிழிவு நோய் பாதிப்பு குறையும்.
கல்லீரலை பாதுகாக்கிறது.
Also Read : உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த 4 ஜூஸ் வகைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்
பாகற்காய் ஜூஸ் ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமானத்தை, கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்கும். ஆரோக்கியமான கல்லீரல் என்பது முழு உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்.
எடை குறைப்பிற்கு உதவும்
வயிற்றில் கொழுப்பு சேர்வதை குறைக்க விரும்புவோருக்கான சிறந்த உதவி பாகற்காய் ஜூஸ் தான். கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்கள் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளைத் தவிர்க்கவும், உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் கொழுப்பை குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
தொற்றுநோய்கள் அதிகமாக பரவுகிற சூழலில், பாகற்காய் ஜூஸ் வைட்டமின் சி, ஜிங்க் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதனால் நோய்கள் தாக்குதல் குறையும்.
சருமம் சுத்தம் செய்யும், முகப்பருவை மேம்படுத்தும்
பாகற்காய் ஜூஸ் உங்கள் உடலை சுத்தமாக்கி, முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகளை குறைக்கிறது. தோல் தெளிவாகவும், பிரகாசமாகவும், இளமையாகவும் இருக்கும்.
இதய ஆரோக்கியம்
பாகற்காய் ஜூஸ் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) குறைத்து, தமனிகளில் புரதப்பதத்தை தடுக்கும் அம்சம் கொண்டுள்ளது. இதனால் இதயநோய்களின் அபாயம் குறையும் மற்றும் ரத்த அழுத்தம் சீராகும்.
Also Read : பேப்பர் கப்களில் டீ, காபி குடிப்பது உடலுக்கு நல்லதா??
கூந்தல் பிரச்சனை
முடி உதிரல், நரைமுடி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த ஜூஸ் உதவுகிறது. வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் முதலியவை உங்கள் முடிகளை வலுப்படுத்தி, முடி நன்கு வளர உதவி செய்யும்.
எப்போது குடிக்க வேண்டும்?
பாகற்காய் ஜூஸை அதிகாலை காலையில், வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது. முதலில் அரை கிளாஸ் குடித்து, பிறகு சுவைக்கு ஏற்ப சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)