Friday, April 18, 2025

PASSPORT-இல் அதிரடி மாற்றம்! இனிமேல் இதெல்லாம் ரொம்ப “easy” தான்!

இந்தியாவில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் படிப்பு, வேலை வாய்ப்பு, சுற்றுலா போன்ற பல காரணங்களுக்காக மக்கள் பாஸ்போர்ட் பெறுவதில் ஆர்வமாக இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மத்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் ஒரு முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதுவரை, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத்துணைவரின் பெயரைச் சேர்க்க, திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயமாக இருந்தது. இந்த விதி தற்போது மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக Annexure J என்ற புதிய படிவத்தை பூர்த்தி செய்தாலே, பாஸ்போர்ட்டில் துணைவரின் பெயரை சேர்க்க முடியும்.

இந்த மாற்றம், இந்தியாவின் பல மாநிலங்களில் திருமண பதிவு நடைமுறைகள் வேறுபடுவதால், சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வந்திருக்கிறது. குறிப்பாக, சில மாநிலங்களில் திருமண பதிவு கட்டாயமாக இருக்கின்றது, மற்ற மாநிலங்களில் அது விரும்பத்தகுந்தது. இதனால், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத்துணைவரின் பெயரைச் சேர்க்கும் போது, பல்வேறு சிக்கல்கள் உருவாகின. இந்நிலையில், Annexure J என்ற படிவம், புகைப்படம் மற்றும் கையெழுத்து உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு, அந்த தகவல்கள் பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்படும்.

மேலும் புனே பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி அர்ஜுன் தியோர் இதை பற்றி கூறும் போது , “இனி, திருமணச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், தம்பதிகள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் Annexure J கொடுத்தாலே, அது செல்லுபடியாகும் ஆதாரமாக ஏற்கப்படும்.” என்றார்.

மேலும், பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத்துணைவரின் பெயரை நீக்க விரும்பினால், அதற்கான சட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். விவாகரத்து, துணைவரின் மரணம் அல்லது மறுமணம் போன்ற காரணங்களால் பெயரை மாற்றுவதற்கான முறைகளும் இப்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய விதி, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பெரிய வசதி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பயண விருப்பங்களைக் கொண்டுள்ள இந்தியர்கள் உள்ள இடத்தில் ஒரு நல்ல முன்னேற்றமாக திகழும்.

Latest news