ஆதார் அட்டை இன்று வெறும் அடையாள ஆவணம் அல்ல. அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான சான்றாக மாறியுள்ளது. அரசுத் திட்டங்கள் முதல் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் வரை ஆதார் அட்டை ஆவணத்தை பயன்படுத்தப்படுகிறது.
விரைவில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாகிறது. அக்டோபர் 1 முதல், IRCTC தளத்தில் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் எண் இணைக்க வேண்டும். போலி முன்பதிவு, அடையாள மோசடி, டிக்கெட் பதுக்கல் ஆகியவற்றைத் தடுக்க இதை அரசு அறிவித்துள்ளது.
ஆதாரின் மிகப்பெரிய பலன், மானியங்கள் நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் சேர்வதே. இது நேரடிப் பலன் பரிமாற்றம் எனப்படும். எரிவாயு மானியம், கல்வி உதவித்தொகை, ரேஷன், விவசாய நிதி போன்றவை இப்போது தாமதமின்றி வங்கிக் கணக்கில் கிடைக்கின்றன.
PAN Card-டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் போலி PAN Card, வரி ஏய்ப்பு குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் OTP சரிபார்ப்பு மூலம் பாதுகாப்பும் வேகமும் அதிகரித்துள்ளது.
ஆதார் வழியாக e-KYC எளிமையாகிவிட்டது. முன்பு வங்கிக் கணக்கு திறக்க, சிம் Card வாங்க ஆவணங்கள் தேவைப்பட்டது. இப்போது ஆதார் அடிப்படையிலான e-KYC மூலம் சில நிமிடங்களில் வேலை முடிகிறது. வங்கி கணக்கு, கடன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அனைத்தும் இவ்வாறு நடைபெறுகின்றன.
ஆதார் அட்டை முகவரிச் சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பாஸ்போர்ட், எரிவாயு இணைப்பு, கல்வி சேர்க்கை ஆகியவற்றில் ஆதார் முக்கியமான ஆவணமாகிறது. QR குறியீடு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முகவரியை உறுதி செய்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஆதார் அட்டை இப்போது அனைத்து துறைகளிலும் அவசியமான ஆவணமாகிவிட்டது.
