சந்தையில் ஆன்மாவை ஏலத்தில் விட்டு இளைஞர்  நடத்திய  கூத்து !

319
Advertisement

டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் அதில் ஒன்று தான்  என்எஃப்டி அதன் பின்னணியில் இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, என்எஃப்டி போன்றவை செயல்படுகிறது. பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடுகிறது.

என்எஃப்டி முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இப்படித்தான் என்எஃப்டி நடைமுறைக்கு வந்தது.  ஆன்லைன் பூனையில் ஆரம்பித்தது தற்போது ரியல் டைமில் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறி மெய்நிகர் உலகில் (virtual reality) நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது. இதைத் தான் 21 வயது நிரம்பிய ஸ்கைக் என்ற நெதர்லாந்தை சேர்ந்த இளைஞர்   ஓபன் ஸீ மார்க்கெட்டில் சாயில் ஆஃப் ஸ்டினஸ் என்ற பெயரில் விற்பனை விளம்பரத்தைப் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர், “ஹலோ.. நீங்கள் ஏதும் ஆன்மாவை வாங்க விரும்புகிறீர்களா? எனது ஆன்மாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை வாங்கி நீங்கள் உங்களின் இஷ்ட தெய்வதுக்கு பகுதியாகவோ, அல்லது முழுமையாகவோ பலி கொடுக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார். கூடவே  “sale of soul agreement” ஆன்மா விற்பனைக்கான ஒப்பந்த பத்திரம் என்றும் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஏல அறிவிப்பு தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.இதுவரை என்எஃப்டியில் ஏலத்தில் விடப்பட்டதிலேயே இந்த ஆன்மாவுக்கு தான் அதிக விலையாக   ($ டாலர் 378)   நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம் . ($378) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.