‘லவ் டுடே’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இதற்கு முன்பு ‘கோமாளி’ படத்தை இயக்கி இருந்தார். இவருடைய நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியான திரைப்படம் ‘டிராகன்’. ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.
டிராகன் திரைப்படம் வசூலில் ரூ. 150 கோடியை நெருங்கி விட்டது. தமிழில் மட்டுமில்லை தெலுங்கில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.
டிராகன் திரைப்படம் வரும் மார்ச் 21 தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.