Tuesday, July 15, 2025

அமெரிக்காவை அச்சுறுத்தும் “டூம்ஸ்டே சுனாமி”! அழிவு நாள் நெருங்கிவிட்டதா?

உலகம் ஒரு பெரிய மாற்றத்தின் பாதையில் செல்கிறது. இந்த மாற்றங்கள் சில நேரங்களில் நம்மை நொடிகளில் தாறுமாறாக அழிக்கக்கூடிய சக்தி கொண்டவை. அதற்காகவே விஞ்ஞானிகள் இப்போது தீவிர ஆய்வுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போதெல்லாம் ஏஐ வளர்ச்சி பற்றிய பேச்சுகளே அதிகம் நிறைந்திருக்கும் நிலையில், அதைவிட ஆபத்தானது இயற்கை பேரழிவுகள் என்பதை நாம் மறந்துவிட்டோம். சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியான PNAS வெளியிட்டிருக்கும் ஒரு ஆய்வு இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

இப்போது உலகம் எதிர்கொள்ள போகின்ற மிகப்பெரிய பேரழிவில் ஒன்றாகத் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது “டூம்ஸ்டே சுனாமி”.இது ஏற்கனவே ஏராளமான விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, குறிப்பாக வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகள், 30 மீட்டர் உயரம் கொண்ட மெகாசுனாமி தாக்கத்தால் நொடிகளில் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன. இது காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் விரைவில் ஏற்படக்கூடிய ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தால் நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விதித்திருக்கின்றனர் .

2100க்குள் இந்த பூகம்பம் உறுதியாக ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் இது நடக்கும் வாய்ப்பு 37% என மதிப்பீடு செய்யப் பட்டிருக்கிறது. அதாவது இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நாளையே நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை என்பதுதான் உண்மை!

இந்த பூகம்பம் ஏற்படும்போது, 2.5 மீட்டர் வரை நிலம் கீழே தள்ளப்படும். அதே நேரத்தில் எழும் மெகாசுனாமி, அமெரிக்காவின் மேற்கு பகுதியில் 8,000 பேருக்கும் மேலான உயிரிழப்பை ஏற்படுத்தும் என FEMA கணிக்கிறது. பூகம்பத்தால் மட்டும் 5,800 பேர் உயிரிழக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2,000க்கும் மேற்பட்ட பள்ளிகள், 100க்கும் மேற்பட்ட முக்கிய கட்டிடங்கள் அழிவை சந்திக்கும் எனவும் \$134 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

பேராசிரியர் டினா துரா (Tina Dura) சொல்வதுபோல, “இது அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய பேரழிவாகவே அமையும்.” மேலும், காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் 60 சென்டிமீட்டர் வரை உயரும் எனவும், அதன் பின்னர் இந்த சுனாமி தாக்கம் இன்னும் மோசமாகும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

source:

https://www.b92.net/english/world/146344/doomsday-tsunami-will-hit-this-part-of-the-world-it-will-be-devastating-photo/vest
https://www.msn.com/en-ca/news/world/doomsday-100-foot-mega-tsunami-likely-to-hit-the-us/ar-AA1ImNjn?cvid=525CB233D2CE46C7B0BDA6C590666014&ocid=hpmsn

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news