Saturday, May 10, 2025

இது தெரியாம தலைக்கு குளிக்காதீங்க??ஆபத்தில் முடிந்து விடும்…

இது பொதுவாக தலைமுடியை கழுவிய பிறகு அல்லது குளித்த பிறகு தண்ணீர் சொட்ட சொட்ட இருக்கும ஈரமான கூந்தலை தூக்கி ஒரு முடிச்சு போட்டோமா அடுத்த வேலைய பார்த்தோமா என்பது தான் பல பெண்களின் வழக்கம்.. இத்தகைய செயலால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

சில நேரங்களில் குளித்து வந்தவுடன் ஈரமான கூந்தலை உலர வைக்காமல் இருந்தால் பல பிரச்சனைகள் எப்படா வாய்ப்பு உள்ளது.. அதாவது இரவில் ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலையிலிருந்து வெப்பம் நீங்க உடல் குளிர்ச்சி அடையும் இதனால் சளி, காய்ச்சல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது..
அது மட்டுமின்றி தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். இதன் காரணமாக காலையில் விழுந்தவுடன் கனமாக உணர்வீர்கள்.
ஈரமான கூந்தலுடன் இரவு தூங்கினால் முடியில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஆகையால் காலையில் எழும்போது முடி உதிர்ந்து கரடு முரடாக இருக்கும்.

குறிப்பாக இரவில் ஈரமான தலையுடன் தூங்கினால் உச்சந்தலையில் பூஞ்சை தொற்று மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு அதிகளவு வழிவகுக்கிறது..

இதனோடு முடியில் ஈரப்பத்தோடே இருந்தால் முடியும் வேர்கள் பலவீனமடைந்து முடி உதிர்தல் மற்றும் உடைப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஈரமான கூந்தலுடன் தூங்கினால் தலையணை ஈரமாகி பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதனால் சருமத்தில் வெடிப்புகள் ஏற்படும் மற்றும் முகப்பருக்கள் வருவதற்கு வழிவகுக்கிறது.
இரவில் தலைக்கு குளிக்கும்போது அது ஒரு வித புத்துணர்ச்சியை ஏற்படுத்தி தூக்கமின்மைக்கு கூட வழிவகுக்கலாம்..

குறிப்பு: இவையெல்லாம் பொதுவான தகவல்களின் அடிப்படையில் கொண்டவையாகும்

Latest news