மார்ச் 28ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை-பெங்களூரு இடையிலான போட்டி, IPL வரலாற்றின் ஆகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. 17 வருடங்கள் கழித்து CSKவை சேப்பாக்கத்தில் வைத்து RCB வீழ்த்தி இருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு சீரான இடைவெளியில், விக்கெட்களை இழந்தாலும் 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK, சீட்டுக்கட்டு போல சரிந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சென்னை தோல்வி அடைந்ததை விடவும் தோனி 9வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி ஆடியது தான், ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ”100 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து CSK தத்தளித்த போது, கடைசியாக தோனி எதற்கு களமிறங்கினார்?. இதற்கு பேசாமல் அவர் ஓய்வை அறிவித்து விடலாம்.
முழங்கால், முதுகுவலியால் அவதிப்பட்டாலும் கூட தோனி 6 அல்லது 7வது இடத்தில் இறங்கி ஆடியிருக்க வேண்டும். IPL போன்ற தொடரில் தோனி இப்படி செய்தது உச்சக்கட்ட சுயநலம்,” இவ்வாறு விதவிதமாக விமர்சித்து வருகின்றனர்.