Sunday, September 28, 2025

எலி தானேனு லேஸ்ல விட்டுடாதீங்க.. உங்க கல்லீரலை காலி பண்ணிடும்!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…

பொதுவாக வீடுகளில் கொசுத் தொல்லையும், எலித் தொல்லையும்,கரப்பான் பூச்சி என பல தொல்லைகள் இருக்கும்.கொசுவால் மலேரியா காய்ச்சல் வரும். டெங்கு காய்ச்சல் வரும் அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்போது எலியால் கல்லீரல் காலியாகிவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.அதாவது, வீடுகளில் காணப்படும் கருப்பு எலிகளில் 4-ல் ஒரு எலிக்கு சி.ஹெப்பாடிகா என்ற புழு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி:

தமிழ்நாடு விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 55 எலிகளை பிடித்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அதில் 38 சதவீத எலிகளில் இந்த தொற்று இருக்கிறது. அதாவது 10 எலிகளில் 4 எலிகள் இந்த ஒட்டுண்ணிகளை சுமக்கின்றன. மக்கள் தொகை பெருக்கமும், மக்களோடு வாழும் இந்த எலிகளின் வாசமும் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும்கூட மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இது எவ்வாறு பரவுகிறது?

எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை. இந்த புழுவின் முட்டைகள் எலியின் கல்லீரலில் உருவாகிறது. ஆனால் அதன் மலத்தின் வழியே வெளியேறாது. இறந்து போன எலிகளை சாப்பிடும் பூனைகள், நாய்கள் அல்லது பாம்புகள் வழியாக அந்த முட்டை மண்ணில் கலக்கிறது. பிறகு மண்ணில் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவுகிறது.

இந்த தொற்று இதுவரைக்கும் யாருக்காவது பரவியது உண்டா?

இந்த மாதிரி தொற்று உலக அளவில் 175 பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். இந்த நோயை கண்டறிவதும் சவாலானது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

ஏனென்றால் கல்லீரலில் இருந்து ‘பயாப்சி’ எடுத்துதான் இதை உறுதிப்படுத்த முடியும். மற்ற எலிகள் மூலம் பரவும் வேறு தொற்றுக்களோடும் இந்த தொற்றை குழப்ப வாய்ப்பு இருப்பதால் கண்டுபிடிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் தேவை என்று தெரிவிக்கின்ன்றனர்.

இதனை எவ்வாறு கண்டறிவது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்!!

ஆரம்ப நிலைகளில் எந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம். தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்கு பிறகோ, சில மாதங்களுக்கு பிறகோ கூட அறிகுறிகள் தோன்றலாம். அது உடலில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், வயிற்று வலி, கல்லீரல் பருமன் போன்றவை ஏற்படலாம். கண்டுபிடிக்காமல் விட்டால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணத்துக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News