Saturday, February 22, 2025

‘இந்தியை திணிக்காதே’, கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

மதுரவாயல் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் வீடுகளுக்கு முன்பு மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிராக பெண்கள் கோலமிட்டு புதுவித போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், மதுரவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் வாசலில் பெண்கள் வண்ண கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! என்ற வாசகங்களுடன் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Latest news