இன்றைய உலகத்தில் பொருளாதார சிக்கல்கள் பொதுவாகவே அதிகரித்து வருகின்றன… சம்பளம் வாங்கும் மக்களுக்கு மாத வருமானம் போதாத நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில், ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் கிடைக்க வேண்டுமென்றால், தபால் நிலையத்தின் POMIS திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
POMIS – அதாவது Post Office Monthly Income Scheme… இது இந்திய அரசால் இயக்கப்படும் ஒரு நிதி திட்டம். இதில் நீங்கள் ஒரு முறை ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் – வட்டி மாதம் மாதம் உங்கள் கணக்கில் வரும். தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ஒரு கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 கிடைக்கும். வருடம் முழுக்க பார்த்தால், ரூ.1.11 லட்சம் வருமானம் உறுதி. இதை தனிநபராக செய்ய விரும்பினால், அதிகபட்சமாக ரூ.9 லட்சம் டெபாசிட் செய்யலாம். அதற்கு மாதம் ரூ.5,550, ஆண்டுக்கு ரூ.66,600 கிடைக்கும்.
இந்த திட்டத்தைத் தொடங்க 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் தகுதியானவர்தான். குழந்தைகள் கூட பெற்றோர் மூலமாக இதைத் தொடங்கலாம். Aadhaar, PAN, மற்றும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருந்தாலே போதும். கணக்கு திறப்பதும் எளிது.
முன்கூட்டியே மூட விரும்பினால், முதல் ஒரு வருடம் முடியாமல் எடுக்க முடியாது. ஆனால் ஒரு வருடத்துக்கு பிறகு மூடும்போது சில விலக்குகள் மட்டுமே காணப்படும். 5 வருடங்களுக்கு முடிந்த பிறகு அசல் தொகையை திரும்ப பெறலாம் அல்லது திட்டத்தை தொடரலாம்.
இது மாத வருமானத்தை இலக்காக வைத்திருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பான, ரிஸ்க் இல்லாத ஒரு நிதி திட்டம்.