நடப்பு IPL தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் தோல்விகளால் தத்தளித்து வருகிறது. இதனால் இந்த 2025ம் ஆண்டில் சென்னையின் Play Off வாய்ப்பு, ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தோல்விக்குப் பிறகு, CSK கேப்டன் தோனி அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், ” இன்றைக்குத் தேவையான ரன்களை அடிக்க முடியவில்லை.
மும்பை டெத் பவுலிங்கை முன்னதாகவே ஆரம்பித்து விட்டனர். நாங்களும் இன்னும் சற்று பெரிய ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். ஆயுஷ் மத்ரே நன்றாக ஆடுகிறார். இப்படி ஒரு பேட்டர் நிச்சயம் எங்களுக்குத் தேவை. கடந்த காலங்களில் நன்றாக ஆடி Play Offக்கு தகுதி பெற்றோம்.
2020ம் ஆண்டு எங்களுக்கு மோசமானதாக அமைந்தது. ஆனால் கிரிக்கெட்டை நாம் சரியாக விளையாடுகிறோமா? நம்முடைய திறனை ஒழுங்காக பயன்படுத்துகிறோமா? என்பதை தான், இங்கு பார்க்க வேண்டும்.
அனைத்து போட்டிகளிலும், எங்களுடைய குறைகளை சரிசெய்ய முயற்சிக்கிறோம். இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சி வசப்படக் கூடாது. பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சரி செய்து, அடுத்த சீசனில் Comeback கொடுப்பதற்கான வழியைப் பார்க்க வேண்டும்,” என்று பேசியிருக்கிறார்.