குடையை மறக்காதீங்க!! தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை… முழு விவரம்

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று மற்றும் நாளை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான மழையும், திருப்பூர் மாவட்டத்தில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் முன்னெச்சரிக்கையாக குடையுடன் செல்லலாம்.

அடுத்த 3 நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை தொடரும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கு கடல் பகுதிகளில் தனிப்பட்ட எச்சரிக்கை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News