பாகிஸ்தானின் சர்வதேச மேம்பாட்டு திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், தொல்லியல் ஆய்வு இடங்கள், உள்ளூர் மொழிகள் மற்றும் கைவினைத் தொழில்களை காக்க பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் நிதி மூலம் நிதி வழங்கப்பட்டு வந்தது.
இது தவிர பாகிஸ்தானின் வேளாண்மை, சுகாதாரம் மற்றும் எரிசக்தி துறை தொடர்பான 5 திட்டங்களுக்கும் அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. இந்நிலையில், இந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்யவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பாகிஸ்தானுக்கான நிதியுதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.