சார்லி கிர்க்கின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திய நடன அசைவு விமர்சனத்திற்கு உள்ளானது.
சார்லி கிர்க்கின் மறைவையொட்டி அரிஸோனா மாகாணத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான அரங்கத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது. இதில் சார்லி கிர்க்கை குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரத்திற்காக தனது உயிரை தியாகம் செய்து சார்லி தியாகியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
சார்லி கிர்க்கின் மனைவி எரிகா கிர்க், தனது கணவரை கொன்றவரை மன்னிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் அமெரிக்காவின் புகழை பட்டியலிடும் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
அப்போது பாடலின் வரிகளை முனுமுனுத்தபடியே டிரம்ப், எரிகாவின் அருகில் நின்று நடனமாடினார். சார்லி கிர்க் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட இந்த விடியோவைப் பகிர்ந்து சிலர் டிரம்ப்பின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.