அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 14 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்து வர்த்தக போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த புதிய வரிகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் இந்தியா உட்பட சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிரம்ப் வரிவிதித்த 14 நாடுகள்
- லாவோ – 40% வரி
- மியான்மர் – 40% வரி
- தாய்லாந்து – 36% வரி
- கம்போடியா – 36% வரி
- வங்கதேசம் – 35% வரி
- செர்பியா – 35% வரி
- இந்தோனேஷியா – 32% வரி
- தென்னாப்பிரிக்கா – 30% வரி
- போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினா – 30% வரி
- மலேசியா – 25% வரி
- துனிசியா – 25% வரி
- ஜப்பான் – 25% வரி
- தென் கொரியா – 25% வரி
- கஜகஸ்தான் – 25% வரி
இந்த வரி நடவடிக்கை, அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலாக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை ஆகும்.