அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் மீதான ரஷிய போர் தொடுத்துள்ளதை பற்றி ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், ரஷிய அதிபர் புதினை ‘மிடுக்கானவர்’, ‘மேதை’ என்று பாராட்டு தெரிவித்து இருந்தார். புதினை அமெரிக்க அரசு கண்டித்து வரும் நிலையில், டிரம்பின் பாராட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மாநாடு ஒன்றில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது:-புதின் ‘மிடுக்கானவர்’ என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் உண்மையில் மிடுக்கானவர்தான். அமெரிக்க தலைவர்கள் ஊமையாக இருந்ததுதான் பிரச்சினை. அவர்கள் தான் புதினை இந்த அளவுக்கு செல்ல அனுமதித்து விட்டனர். ஆனாலும் , உக்ரைன் அதிபர் துணிச்சலானவர் என்று தனது உரையில் பேசியுள்ளார் .
ரஷிய அதிபர் புதினை பாராட்டிய டிரம்ப்
Advertisement