மகாராஷ்டிராவில் வியப்பு: ஒரு குடும்பத்திற்கு பத்து லிட்டர் பால்?

359
Advertisement

ஐந்து, நான்கு, மூன்று என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நவீன குடும்ப கட்டமைப்புக்கு நடுவே, 72 பேர் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தை பார்த்தால், பலருக்கும் வியப்பாக மட்டுமில்லாமல் பொறாமையாகவும் கூட இருக்கும்.

மகாராஷ்டிராவில் சோலாப்பூர் நகரைச் சேர்ந்த டொய்ஜோட் குடும்பம் நான்கு தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மட்டும் பத்து லிட்டர் பால் தேவைப்படுகிறது.

மேலும், ஒரு வேளை சாப்பாட்டுக்கு 1200 ரூபாய் வரையும், அசைவ உணவு சமைக்க இன்னும் மூன்று மடங்கு வரை செலவாவதாகவும் கூறும் டொய்ஜோட் குடும்பத்தினர், ஒற்றுமையாக செயல்பட்டு அனைத்து சவால்களையும் சமாளிப்பதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

இந்த குடும்பத்தை பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து, இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.