Friday, January 3, 2025

நாய்கள் நூலகம்…

மனிதர்களுக்கான நூலகம் கணக்கிலடங்காமல் உள்ளன.
ஆனால், எல்லாரும் அங்குசென்று புத்தகங்களைப் படிப்பதில்லை.

நாய்களுக்கும் நூலகங்கள் உள்ளதா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால்…
அதற்கு இங்கு ஒரு போர்டைத் தொங்கவிட்டுள்ள குறும்பு ஆசாமிதான் காரணம்.

பாருங்களேன்…அவரது சேட்டையை…

நாய்கள் நூலகம் என்று பெரிய எழுத்தில் எழுதி ஒரு பலகையை
வைத்துவிட்டு, அதில், ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று
எழுதிவிட்டு, அடுத்த வரியில் ஒரு குச்சியை வைத்துவிட்டுச்
செல்லுங்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாய்களால் பாதிக்கப்பட்ட அனுபவத்தில் கரைகண்டவராக இருப்பாரோ
இந்த ஆசாமி…?

ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிப்போட்டால், அதைத் தின்றுவிட்டு
வாலாட்டிக்கொண்டே பின்னாலேயே வரப்போகிறது-…இதற்குப்போய்
குச்சியெல்லாம் தேவையா என்கின்றனர் சிலர்….

இந்த மாதிரி எத்தனை நாய்களை நாங்க பார்த்திருக்கிறோம் என்கின்றனர்
பலர்…. நாங்க எதுக்கு லைப்ரரிக்கெல்லாம் போகணும்…?
வேணும்னா நீங்க வந்து எங்ககிட்ட கத்துக்குங்க என்கின்றனர்
சில குறும்புத்தனமான நண்பர்கள்.

Latest news