மனிதர்களின் செல்லப்பிராணிகளாக அதிகம் வளர்க்கப்படுபவை நாய்கள் தான்.மற்ற விலங்குகளை பார்க்கிலும் நாய்கள் மனிதர்களின் எண்ணங்களை உணரக்கூடியவை.
உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் அவைகள் செய்யும் சேட்டைகள் போன்ற பல சுவாரசியமான தருணங்களை நாம் இணையத்தில் பார்த்ததுண்டு.அதேசமயத்தில் , உரிமையாளரை பிரியும் நேரத்தில் அவைகள் தனிமையை உணர்ந்து சிலநேரங்களில் கண்கலங்கி உரிமையாளரை நினைவுபடுத்தும் செயல்களில் ஈடுபடும்.
நாய்கள் மனிதர்களை விட 25% மடங்கு வேகமாக நேரத்தை உணர்கின்றன, அதாவது உரிமையாளர்கள் வெளியே சென்று திரும்பி வருவதற்குள் தங்கள் உரிமையாளர்களை நீண்ட நேரம் அவைகள் தவறவிட்டதாக அர்த்தம்.
இதுபோன்று மனதை கலங்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் , வீட்டில் உரிமையாளர் ஒருவர் தன் செல்லபரணியான நாய்யை வீட்டில் தனியாக விட்டுசென்றுவிடுகிறார்.
உரிமையாளரை பிரிந்து வீட்டில் தனியாக உள்ள அந்த நாய் செய்த காரியம் ,மனதை கலங்கச்செய்துள்ளது, வீட்டில் உள்ள உரிமையாளரின் ஷூவை வாயில் கவ்வி எடுத்துவந்து ஷோபாவில் வைத்து தன் தலையை அதன் மீது சாய்த்து படுத்துக்கொள்கிறது.
சோக முகத்தில் தன் உரிமையாளரின் ஷூவுடன் படுத்திருக்கும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.