சகோதரனுக்கு பாட சொல்லித்தரும் நாய்க்குட்டி

259
Advertisement

இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் , நாய்க்குட்டி ஒன்று சகோதரனுக்கு எப்படி ‘பாடுவது’ என்று கற்றுக்கொடுக்கிறது.

உடன்பிறப்புகளுக்கிடையேயான பிணைப்பின் அழகான தருணங்களைக் காட்டும் வீடியோக்கள் எப்பொழுதும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

இது போன்ற வீடியோ ஒன்று இணையவாசிகளை ஈர்த்துவருகிறது. அதில் , வயதான சமோயெட் நாய்க்குட்டி ஒன்று மற்றும் இளைய ஹஸ்கி நாய்க்குட்டி ஒன்றும் வீட்டில் கச்சேரி செய்ய முடிவு செய்தது போல ,

இரண்டும் பாட தொடங்குகிறது, அதாவது ஊளை விடுகின்றன. சமோய்ட் நாய் முன்னிலை வகிக்கும் போது, அழகான ஹஸ்கி நாய்க்குட்டி மிகவும் கீழ்ப்படிந்து அழகான முறையில் அதைப் பின்பற்றுகிறது.

இந்த வீடியோ முதலில் ராக்கி மற்றும் அகிமோ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது . அத்துடன் “நாங்கள் பெருமையுடன் “ராக்கிமோ” கச்சேரியை வழங்குகிறோம். டிக்கெட்டுகளுக்கு அணுகவும் எனவும் பகிர்ந்து உள்ளனர் அதன் உரிமையாளர்கள்.