Sunday, February 16, 2025

2 மில்லியன் சொத்துக்கு வாரிசான நாய்

https://www.instagram.com/p/CIoOLZTn1-N/?utm_source=ig_web_copy_link

தனது 2 மில்லியன் சொத்துக்கு வாரிசாக செல்லப்பிராணியை ஒருவர் நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரபல பிளேபாய் மாடலாக இருப்பவர் ஜு இசென். பிரேசிலைப் பூர்வீகமாகக்கொண்ட இவர் சமீபகாலமாக அமெரிக்காவில் வசித்துவருகிறார்.

தன்னுடைய 2 மில்லியன் சொத்துகள், ஒரு அபார்ட்மென்ட், இரண்டு வாகனங்கள் ஆகியவற்றுக்கு வாரிசாகத் தனது செல்லப் பிராணியான பிரான்சிஸ்கோவை நியமித்துள்ளார்.

இதன்மூலம் சுமார் 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கு உரிமையாளராகப் போகிறது அந்த செல்லப் பிராணி. இதற்கான சட்ட நடவடிக்கைக்காகத் தனது வழக்கறிஞருடன் ஆலோசித்து வருகிறார் ஜுஇசென்.

ஐசென் பிளேபாய் இதழின் சிறந்த மாடல்களுள் ஒருவரான ஜுஇசென் கணிசமான அளவு பணம் சம்பாதித்து வருகிறார். இதுவரைத் தன்னை வளர்த்துக்கொள்வது பற்றி யோசித்ததாகவும், இனிமேல் தனது எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும்,35 வயதான ஜு இசென்னுக்கு வாரிசுகள் இல்லாததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள இது சரியான நேரமல்ல, அவர்களை வளர்ப்பது கடினம் என்று கூறியுள்ளார்.

அதிர்ஷ்டக்கார செல்லப் பிராணி பிரான்சிஸ்கோ.

Latest news