ஜனாதிபதியிடம்  பதக்கம் பெற்ற லிட்டில் ஹீரோ

321
Advertisement

நாய்கள் உண்மையிலேயே மனிதனின் சிறந்த நண்பன், அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையே  தொடர்ந்து  பிரச்சனை நீடித்து வரும்  நிலையில்,கீவ் நகரத்தில் இருந்து சிறிய போர் வீரன் வெளிப்பட்டான், அவன் தனது நாட்டிற்காக போர்க்களத்தில் சேவையின் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினான்

உக்ரைனின்  மோப்ப  நாய்  பேட்ரான் தனது திறமையைப் பயன்படுத்தி ரஷ்ய படையெடுப்பின் போது பல கண்ணிவெடிகள் மற்றும் குண்டுகளை மோப்பம் பிடித்து பல உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளது.இதற்காக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம்  பதக்கம் பெற்றுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட வெடிபொருட்களைக் கண்டறிந்து, வெடிப்பதைத் தடுத்துள்ளது.இதையடுத்து,போர் வீரர்களுக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சில்  பேட்ரான் மற்றும் அதன் பயிற்சியாளரை  கௌரவப்படுத்தி  ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதக்கத்தை வழங்கினார்,