சர்க்கரை அளவை டெஸ்ட் செய்துகொள்ளும் செல்லப்பிராணி

336
Advertisement

நாய்கள் மனிதர்களிடம் தன்னலமற்ற அன்பைக் காட்டும் அழகான விலங்குகள் ஆகும் . தன்னை வளர்பவர்களிடம் நன்றி விசுவாசத்தோடும் , அன்போடும் இருப்பவை நாய்கள்.

சமீபத்தில் இஸ்டாக்ராமில் பகிரப்பட்டவுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ,

வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று உற்சாகத்துடன் சக்கரை அளவை பரிசோதித்துக்கொள்கிறது. அதுவும் தினமும் இரவு நேர உணவிற்கு முன் தன் உரிமையாளர் பரிசோதனை மேற்கொள்ள ஒத்துழைப்பு தருகிறது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில் ,

தங்கள் செல்ல பிராணி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினம் இரவு சர்க்கரை அளவை சரிபார்ப்போர்ப்போம் .இரவு நேர உணவு சாப்பிடும் நேரம் வரும்போது மிகவும் உற்சாகத்துடன் தானாகவே வந்து படுக்கையில் படுத்துக்கொள்ளும் . பரிசோதனை செய்து முடிக்கும் வரை ஒத்துழைப்பு தருவதாக கூறுகிறார் .

மனிதர்களை போலவே.. அதன் நண்பனான மற்றொரு குட்டி நாயும் பரிசோதனை முடியும் வரை காத்திருக்கிறது.

இதுபோன்ற செல்ல பிராணிகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் குழந்தைகளாக வளர்க்கப்படுகிறது. குழந்தைகள் குணம் கொண்ட செல்ல பிராணிகளில் நாய்கள் முதலிடத்தில் உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது.