Saturday, July 19, 2025

அமெரிக்காகிட்ட ஆயுதங்கள் இல்லையா? போர் நடந்தால் 8 நாட்கள் மட்டும் தான்

அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ராணுவ சக்தி! விமானப்படை, கடற்படை, நிலப்படை என எல்லாவற்றிலும் முதல் இடம்! பாதுகாப்பு துறைக்காக மட்டும் கடந்த ஆண்டில் மட்டும் 961 பில்லியன் டாலர் பட்ஜெட். அடுத்த ஆண்டில் அது 1 டிரில்லியன் டாலரைத் தாண்டப் போகிறது. ஆனால் இப்போது இதையெல்லாம் உடைக்கும் வகையில் ஒரு பரபரப்பான எச்சரிக்கை வெளியாகி இருக்கிறது.

ட்ரம்புக்கு நெருங்கிய நண்பரும், பென்டகனில் முன்னாள் சீனியர் அட்வைசராக இருந்தவருமான டக்ளஸ் மெக்ரிகோர் சொல்கிறார். “இப்போது போர் வந்தால்… அமெரிக்காவால் வெறும் 8 நாட்களுக்குத்தான் தற்காப்பும் தாக்குதலும் செய்ய முடியும்” அதற்குப் பிறகு அணு ஆயுதத்துக்குத்தான் கைகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்.

அமெரிக்கா ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம், பிற நாடுகளுக்கு ஆயுதங்களை மொத்தமாக அனுப்பி விட்டு விட்டது! குறிப்பாக ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு 2022 முதல் தொடர்ந்து ஆயுதங்கள் கொடுத்ததே, இந்த பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். பேட்ரியாட் ஏவுகணைகள், 155 மிமீ குண்டுகள், நீண்ட தூர ஏவுகணைகள் என முக்கியமான தளவாடங்கள் தற்போது குறைவாகவே உள்ளன என பென்டகனே ஒப்புக்கொண்டு விட்டது.

டக்ளஸ் மெக்ரிகோர் ‘நமக்கு தற்போது இருப்பது, பாதுகாப்புக்கான ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் மற்ற ஆயுதங்கள் எல்லாம் அது வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே போதுமானவையாக உள்ளன!- என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த எச்சரிக்கை, ட்ரம்ப் மீண்டும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது சரியா? வேண்டாமா? என்ற பெரிய கேள்வியைக் கிளப்பி இருக்கிறது.

ஒருபுறம் உலக வல்லரசாக இருக்கும் அமெரிக்கா… இன்னொரு புறம் வெறும் 8 நாட்களுக்கே போதுமான ஆயுதங்களை மட்டுமே வைத்திருக்கிறது… இது யாரும் எதிர்பார்க்காத டென்ஷன் situation ஆகவே இப்போது இருக்கிறது.

இதெல்லாம் நடக்கின்ற நேரத்தில், எதிர்காலத்தில் அமெரிக்கா எந்த முடிவை எடுக்கப்போகிறது? என்பது இப்போது பெரிய கேள்வியாகவே இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news