கண்ணாடிக் கூண்டுக்குள் சாப்பிட்டால் கொரோனா பரவாதா?

372
Advertisement

சாப்பிடும்போது கொரோனா பரவாமல் இருக்கும்விதமாக ஹோட்டல் நிர்வாகம் ஒன்று புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளது.

டோக்யோவில் லான்டர்ன் டைனிங் என்னும் விநோதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கண்ணுக்கு கண்ணாடி அணிவதுபோல, உடம்புக்கு கண்ணாடி அணிந்துகொண்டு சாப்பிடுவதுபோலுள்ளது இந்தப் புதுமை.

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் விருந்தோம்பல் துறையும் விதிவிலக்கல்ல.

ஓட்டல்களில் பார்சல் விற்பனைக்கு மட்டுமே முதலில் அனுமதிக்கப்பட்டதும், கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பிறகு, சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவுண்ண அனுமதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதும் தெரிந்ததே.

இந்த நிலையில், ஜப்பானிலுள்ள ஹோஷியோனேயா என்னும் உணவகம் தங்கள் ஓட்டலில் இந்த லான்டர்ன் டைனிங் என்னும் புதுமையைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, சாப்பாட்டு மேஜைக்குமேல் விளக்குகள் பொருத்தப்பட்ட, சிறிய கண்ணாடிக்கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மெல்லியக் கண்ணாடிக்கூண்டுகள் 102 செ-மீ உயரமும், 65 செ.மீ விட்டமும் அளவுடையது.

இந்த உணவகத்தில் ஒரு வாடிக்கையாளர் உண்பதற்கான கட்டணமாக 260 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தும்மும்போதோ இருமும்போதா நீர்த் திவலைகள் எதிரிலுள்ள வாடிக்கையாளர்கள்மீது பரவாமலிருப்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது ஓட்டல் நிர்வாகம்.

அப்படியெனில், கொரானா பரவாதா என்றுதானே கேக்குறீங்க…?அது தெரியாது….

இது கொரோனாகிட்ட கேட்க வேண்டிய கேள்வி